ஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன.

இதனை அடுத்து நெய்வேலியில் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்க்கு சம்மன் கொடுத்து அவரையும் அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை செய்ததாகவும் பரபரப்பு தகவல் வெளிவந்தது

இந்த நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்வதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி நீலாங்கரையில் உள்ள விஜய்யின் மற்றொரு வீட்டிலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இன்று காலை முதல் விஜய் மற்றும் விஜய் பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவதை கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது.
 

More News

கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..! 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.  

சுற்றுச்சூழல் பிரச்சாரம் - அண்டார்டிக்காவின் உருகும் பனிப்பாறைகளுக்கு நடுவே ஒரு நீச்சல் பயணம்

ஒரு ஆய்வில் கீரின்லாந்தில் பனிப்பாறைகளின் உருகும் தன்மை அதிகரித்து விட்டதை கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்

மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

படப்பிடிப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருமான வரித்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.

. 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.

“வால்க தமில்” – தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்தினை கிண்டலித்த எஸ்.வி.சேகர்

முன்னதாக, தமிழகப் பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.