சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு
- IndiaGlitz, [Tuesday,November 28 2017]
கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தை முற்றுகையிட்டு சோதனை மேல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் ஒட்டுமொத்தமாக ரெய்டு நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்
இந்த நிலையில் இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சத்யம் சினிமாஸ் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை சசிகலா தரப்பினர் வாங்கியதில் முறைகேடு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.