close
Choose your channels

விஜய் உள்பட 'புலி' படக்குழுவினர் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை

Wednesday, September 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் விஜய், இயக்குனர் சிம்புதேவன், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அவரது அலுவலகம், நடிகைகள் நயந்தாரா, சமந்தா, இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம்,தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, மதுரை அன்பு, பி.டி.செல்வகுமார் உள்பட மொத்தம் 25 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மதுரை, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள இவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 'புலி' திரைப்படம் கணக்கில் வராத பணத்தில் தயாரிக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு வந்த தகவலை அடுத்தே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment