21 ஆண்டுகளுக்கு பின் ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை

  • IndiaGlitz, [Saturday,November 18 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்றிரவு அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து பேர் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். நீதிபதியிடம் சிறப்பு அனுமதி பெற்று அவர்கள் சோதனை செய்ததாகவும், ஜெயலலிதா வீட்டில் அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் மட்டுமே அவர்கள் சோதனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 2 லேப்டாப், ஒரு பென் டிரைவர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. சோதனையின்போது ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் மற்றும் பூங்குன்றன் ஆகியோர் உடனிருந்தனர்.

21 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா வீட்டில் நடந்துள்ள இந்த சோதனையால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சோதனைக்கு மத்திய அரசின் அரசியல் சதியே காரணம் என்று தினகரன் அணியில் உள்ள தலைவர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் வழக்கம்போல் இந்த சோதனை குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் சன்னிலியோன்: பிரபல நடிகையுடன் நேரடி நிகழ்ச்சி

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் சமீபத்தில் கேரளா வந்திருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை, கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்.

'நாச்சியார்' படத்தில் இடம்பெற்ற 'அந்த' வார்த்தை நீக்கப்படும். எஸ்.வி.சேகர்

சமீபத்தில் வெளியான இயக்குனர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசுவதாக இடம்பெறும் ஒரு வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்

என் வாழ்வில் இன்று முக்கிய நாள்: ஜிவி பிரகாஷ் பெருமிதம்

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் 'நாச்சியார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது

தளபதி விஜய் இடத்தில் தனுஷ்! மிக விரைவில் ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் வெற்றி குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படத்தை இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது.