'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் உறவினரும் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறில் இருக்கும் ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். நேற்று சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சீன செல்போன் தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. இந்த செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் சேவியர் பிரிட்டோ நிறுவனத்துக்கு தொடர்பு இருந்ததால் அவரது அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பணிகளை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம்தான் கையாளுவதாக தகவல் வந்ததையடுத்து அவருடைய நிறுவனத்தில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை செய்யப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.
சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோவின் வீடு மற்றும் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments