ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி துறையினர் சோதனை

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் சற்றுமுன்னர் வருமான வரித்துறையினர் சோதனை செய்து  வருகின்றனர். 10 பேர் கொண்ட குழுவினர் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவெளிவந்துள்ளது. வருமான வரி சோதனை செய்து வருவதை ஜெயா டிவியும் உறுதி செய்துள்ளது.

இந்த சோதனை முடிந்தவுடன் தான் இது எந்தமாதிரியான சோதனை என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயா டிவி அலுவலகத்தில் மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வருமான வரிக்கணக்கை ஜெயா டிவி அலுவலகம் முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் சிறையில் நேற்று சசிகலாவை தினகரன் சந்தித்த நிலையில் இன்று ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னைக்கு அங்கீகாரம் அளித்த ஐநாவின் யுனெஸ்கோ: பிரதமர் மோடி வாழ்த்து

ஐநா என்று கூறப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கம் யுனெஸ்கோ அமைப்பு. இந்த அமைப்பு கிரியேட்டிங் சிட்டீஸ் (Creative Cities) என்ற அங்கீகாரத்தை உலகின் சிறந்த நகரங்களுக்கு அளித்து வருகிறது.

சூர்யா-ஜோதிகா மகளுக்கு கோல்டன் பேட் கொடுத்த கிரிக்கெட் பிரபலம்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா, இந்த சின்ன வயதிலேயே பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறாராம்

ரஜினியுடனான மோதலை தவிர்க்க கமல் போட்ட திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகர் மாஸ் நடிகராக, வெற்றி பெற்ற நடிகராக, சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டால், அவருக்கென்றும், அவருடைய படங்களுக்கு என்றும் ஒரு ஃபார்முலாவை அமைத்து கொள்வார். அதன்படியே அவரது பயணம் இருக்கும்.

விமான பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய இண்டிகோ ஊழியர்: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ விமான பணியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி.சிந்து குற்றம் சாட்டியிருந்தார்.