'வலிமை' நடிகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடித்த நடிகை ஒருவர் பிரபல யூடியூபராகவும் இருந்து வரும் நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
யூடியூப் மூலம் கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் சரிவர வருமான வரி கட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பிரபலமான யூடியூபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் பிரபல யூடியூப், ’வலிமை’ திரைப்படத்தில் நடித்த நடிகை பியர்லி மானே என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ’வலிமை’ திரைப்படத்தில் கிறிஸ்டினா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறையினர் பியர்லி மானே வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக சோதனை செய்து வருவதாகவும், சோதனை முடிந்த பின்னர் அவரது வீட்டில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments