விஷால் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் அலுவலகத்தில் நேற்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால் உண்மையில் நேற்று சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 'எனது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுவொரு வழக்கமான சோதனை தான். இதன் பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் என்று நான் கருதவில்லை. அப்படியே இருந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். நான் ஒழுங்காக வரி கட்டி வருவதால் எந்த சோதனைக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறினார்.
இந்த நிலையில் ரூ.51 லட்சம் வரி செலுத்த வேண்டிய விவகாரம் குறித்து விஷால் வரும் 27ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் இதுகுறித்து விளக்கம் அளிக்க விஷால் ஆஜராகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments