நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நாளே அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
சரத்குமார் வீட்டில் சோதனை முடிந்த நிலையில் அவருடைய மனைவியும் ராடன் மீடியா நிறுவனருமான ராதிகாவின் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் சுமார் 11 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நேரில் ஆஜராகுமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக சற்று முன்னர் தகவல் வந்துள்ளது. சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ராதிகா நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com