சூப்பர்ஹிட் 'கேஜிஎப் 2': யாஷ் உள்பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்தாலும் ரூபாய் 700 கோடிக்கு மேல் வசூல் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றி அடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை

தற்போது உலகம் முழுவதும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகாலம் தங்களது உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இந்த சம்பவத்திற்காக பெற்ற சம்பளத் தொகையை பார்க்கும்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

‘கேஜிஎப் 2’ திரைப்படத்தில் நடித்த யாஷ் உள்பட இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

யாஷ்: ரூ.27 கோடி

சஞ்சய் தத்: ரூ.10 கோடி

ரவீனா டண்டன்: ரூ.2 கோடி

ஸ்ரீந்தி ஷெட்டி: 4 கோடி

பிரகாஷ்ராஜ்: ரூ.82 லட்சம்

அனந்த்நாக்: ரூ.52 லட்சம்

மாளவிகா அவினாஷ்: 62 லட்சம்

இயக்குனர் பிரசாந்த் நீல்: 20 கோடி

மேற்கண்ட கணக்கின்படி முக்கிய நடிகர்களின் சம்பளம் சுமார் 65 கோடி தான் வருகின்றது. மற்ற டெக்னீஷியன், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு செலவு என பார்த்தாலும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி தான். ஆனால் இந்த படம் பட்ஜெட்டை விட சுமார் ஏழு மடங்கு வசூல் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

More News

சிவாஜி, ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகர் சக்கரவர்த்தி காலமானார், அவருக்கு வயது 62.

வித்தியாசமான கேரக்டரில் ஜிபி முத்து: வைரல் போஸ்டர்!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து வித்தியாசமான கேரக்டரில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது .

தளபதி 66: விஜய்யின் சகோதரர் கேரக்டரில் விஜய்யின் நண்பர்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

கேரளாவில் எக்ஸ்-இ கொரோனா? 4 ஆம் அலைக்கு அறிகுறியா?

கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆம் அலைத் தாக்கத்தில் இருந்து மீண்ட  இந்தியா சமீபத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன்... தீயாய் பரவும் வீடியோ!

நாக் அவுட் மன்னன் மைக் டைசன் பாக்சிங்குங்கு மட்டுமல்ல, சர்ச்சைக்கும் பெயர்பெற்றவர் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான்