இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்.. எத்தனை தமிழ் படங்கள்?
- IndiaGlitz, [Thursday,July 25 2024]
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
முதல் கட்டமாக சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவான ’வெப்பன்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் ’சட்னி சாம்பார்’ இந்த வாரம் முதல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘காழ்’ என்ற யுகேந்திரன் நடித்த திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
அதேபோல் ’யெவம்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ’கிராண்ட்மா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ’செப் சிதம்பரா’ என்ற கன்னட படம் அமேசான் பிரைம் ஓடிடியில், ’பவி கேர் டேக்கர்’ என்ற மலையாள படம் சிம்ப்ளி சௌத் ஓடிடியில் வெளியாகிறது.
மேலும் ’பரதநாட்டியம்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், ’ஸ்வார்கர்யம் சம்பவ பகுலம்’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.