'வாரிசு' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்.. ரசிகர்களுக்கு செம விருந்து..!

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ உள்பட இந்த வாரம் ஓடிடியில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு செம விருந்தை அளித்துள்ளன.

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது போலவே ஓடிடியிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தை அளித்து வருகின்றன. அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ‘வாரிசு’ திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது. அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ’வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்சேதுபதி, சந்தீப் கிஷான் நடித்த ‘மைக்கேல்’ ஆஹா ஓடிடியிலும், 'இரு துருவம்’ என்ற படம் சோனி லைவி ஓடிடியிலும், மேலும் கன்னட திரைப்படமான ‘க்ராந்தி’ , மலையாள படமான ‘தன்கம்’ ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமிலும், தெலுங்கு திரைப்படமான ‘வால்டர் வீரய்யா’ ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ஆகிய படங்கள் நெட்பிளிக்\ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளன.


 

More News

மால டம் டம்… மஞ்சர டம் டம்… நடிகை மிருணாளினியின் மாலத்தீவு பீஸ் போட்டோஷூட்..!

 விஷால் நடித்த 'எனிமி' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்…  என்ற பாடலில் நடிகை மிருணாளினி தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தனது இன்ஸ்டாவில்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிரபல ஹீரோ இணைகிறாரா?

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ மற்றும் இயக்குனர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ஒரு நல்ல படத்தை இப்படியா சொதப்புவது? 'கைதி' இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்..!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி' திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

'பகாசூரன்' வெற்றிக்காக தானே களமிறங்கிய இயக்குனர் மோகன் ஜி: வைரல் வீடியோ..!

 'பகாசூரன்' வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தானே களம் இறங்கி போஸ்டர் ஒட்டிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

ரிலீசுக்கு தயாராகிய அருண்விஜய்யின் அடுத்த படம்.. வைரல் புகைப்படம்..!

அருண் விஜய் நடித்த 'பார்டர்' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அருண்விஜய்யின் இன்னொரு படமும் ரிலீசுக்கு தயாராக