close
Choose your channels

'வாழை' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

Thursday, October 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை’ உட்பட சில தமிழ் படங்களும் மற்ற மொழி படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து ஓடிடியிலும் இன்னும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் இந்த வாரம் ’படிக்காத பக்கங்கள்’ என்ற தமிழ் படமும் அமேசான் பிரைமில் ’போகும் இடம் வெகு தூரம் இல்லை’ என்ற தமிழ் படமும் ரிலீஸ் ஆகவுள்ளன. மேற்கண்ட இந்த மூன்று தமிழ் படங்களை அடுத்து மற்ற மொழி படங்கள் என்னென்ன ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்ப்போம்.

ஈடிவி வின் ஓடிடியில் ‘தத்வா’ மற்றும் ‘பைலம்பிலிகா’ ஆகிய தெலுங்கு படங்களும், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘மதுவடலரா 2’ என்ற தெலுங்கு படமும், ஆஹா ஓடிடியில் ‘கோரிபுராணம்’ என்ற தெலுங்கு படமும் ரிலீஸ் ஆகவுள்ளன.

மேலும் ஆஹா ஓடிடியில் ‘லெவல் கிராஸ்’ என்ற மலையாள படமும், சோனி லைவ் ஓடிடியில் ‘ஜெய் மகேந்திரன்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment