இந்த வாரம் ஓடிடியில் இரண்டு தமிழ் திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் அதே வெள்ளிக்கிழமைகளில் ஓடிடியில் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் உள்பட என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.

விமல் நடித்த ‘தெய்வ மச்சான்’ என்ற தமிழ்ப்படம் தான் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ’Boo’ என்ற ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கேரக்டரில் நடித்த தமிழ், தெலுங்கு திரைப்படம் ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

மேலும் ஆஹா ஓடிடியில் ’SathiGani Rendu Ekaralu’ என்ற தெலுங்கு திரைப்படம், அமேசான் ப்ரைமில் ’Pachuvum Athbutha Vilakkum’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகிறது. மேலும் ஜீ5 ஓடிடி தளத்தில் ’KisiKa Bhai KisiKiJaan’ மற்றும் ‘Sirf EkBandaa KaafiHai’ ஆகிய இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் வெளியாகின்றன. மேலும் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ‘பாரதா சர்க்கஸ்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் ‘தீராக்காதல்,’, மற்றும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.