இந்த வார ஓடிடியில் த்ரிஷாவின் 'தி ரோடு' உள்பட 4 தமிழ்ப்படங்கள்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் கார்த்தி நடித்த ‘ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகிர்தண்டா’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ‘ரெய்டு’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடியிலும் நான்கு தமிழ் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் உள்ளது.

முதல் கட்டமாக த்ரிஷா நடித்த ’தி ரோடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதேபோல் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய வெப் தொடரான ’லேபிள்’ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் அமேசான் பிரைமில் ’ஷாட் பூட் த்ரி’ என்ற தமிழ் படம் வெளியாக உள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை அடுத்து ’புலிக்குத்தி பாண்டி’ என்ற திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளது. முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன், சமுத்திரகனி, சிங்கம்புலி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மேற்கண்ட நான்கு தமிழ் திரைப்படங்களோடு ’வாலாட்டி’ என்ற மலையாள திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரோஷன் மாத்யோ ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி நாயகியாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் நான்கு தமிழ் படங்கள் மற்றும் ஒரு மலையாள படம் இந்த வாரம் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.