சொர்க்க வாசல்' உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!
- IndiaGlitz, [Thursday,December 26 2024]
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஆர்.ஜே பாலாஜியின் ’சொர்க்கவாசல்’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ என்ற திரைப்படம் ஆகா மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய இரண்டு ஓடிடியில் வெளியாகிறது. இந்த படம் ஏற்கனவே ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து விஜய் பிரசாந்த் நடித்த ’ரூபன்’ என்ற திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது. மேலும் பிரபுதேவா நடித்த ’ஜாலியோ ஜிம்கானா’ என்ற திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படமும் இந்த வாரம் ஆகா ஓட்டிட்டுகள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு வெளியான ’வட்டார வழக்கு’ என்ற திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வாரம் வெளியாகும் தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த வாரம் ஈடிவி வின் ஓடிடியில் ‘ராஷ்யம் இதம் ஜெகத்’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது.
மேலும் ப்ரைமில் ‘தாணரா’ என்ற மலையாள திரைப்படம், ‘மடனோல்சவம்’ என்ற மலையாள திரைப்படம், மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ‘பஞ்சாயத் ஜெட்டி’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகிறது.