'கொட்டுக்காளி' உள்பட இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சூரி நடித்த ’கொட்டுக்காளி’ உள்பட நான்கு படங்கள் வெளியாகியுள்ளது

சூரி நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் அருள்நிதி நடித்த’ டிமான்டி காலனி 2’ திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது

மேலும் காபி என்ற தமிழ் படம் மற்றும் ’பிலிங்க்’ என்ற தமிழ் டப்பிங் படம் ஆகிய இரண்டும் ஆகா ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ’சரிபோதா சனிவாரம்’ என்ற நானி நடித்த திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் ஈடிவி வின் ஓடிடியில் ’ஆர்டிஐ’ என்ற தெலுங்கு திரைப்படமும் ஆகா ஓடிடியில் 'பிரிதிநிதி 2’ என்ற தெலுங்கு படமும் அமேசான் பிரைமில் ’பிரபுத்துவ ஜூனியர் கலாசாலா’என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது.

மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஸ்ட்ரீட் 2’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது என்பதும் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ‘பரதநாட்டியம்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது