close
Choose your channels

சமந்தாவின் 'குஷி' உள்பட 4 திரைப்படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கும் குஷி தான்..!

Wednesday, September 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’, ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ சித்தார்த் நடித்த ’சித்தா’ போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த ’குஷி’ உள்பட 4 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த ரொமான்ஸ் திரைப்படம் ’குஷி’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

அதேபோல் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷான் நடிப்பில் உருவான ’அடியே’ என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் சோனி லைவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.

சவுத் ஓடிடியில் சந்தானம் நடித்த ‘கிக்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாகிறது. அதேபோல் இந்த வாரம் வெளியாகும் தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் குறித்த தகவலையும் தற்போது பார்ப்போம்

துல்கர் சல்மான் நடித்த ‘கிங் ஆப் கோதா’ என்ற மலையாள திரைப்படம் இந்த வாரம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. மேலும் ஷரவன் ரெட்டி நடித்த ‘டர்ட்டி ஹரி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘ஏஜண்ட்’ என்ற தெலுங்கு படம் சோனி லைவ் ஓடிடியில், ‘பாபம் பசிவடு’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், குமாரி ஸ்ரீமதி என்ற தெலுங்கு படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும்.

மேலும் அமேசான் ப்ரைமில் ‘கொரோனா தவான்’ என்ற மலையாள படமும் இந்த வாரம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment