தனுஷின் 'ராயன்' உள்பட இன்று என்னென்ன படங்கள் ஓடிடியில்? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இதோ:

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்த நிலையில் இன்று முதல் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் உள்பட பலரும் நடித்த ’கல்கி 2898ஏடி’ என்ற திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான ’ஜமா’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 3 தமிழ் படங்கள் தவிர மற்ற மொழி படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

’விராஜி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘ஜிஆர்.ஆர்.ஆர்’ என்ற மலையாள திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில், ’ஸ்வர்க்கர்யம் சம்பவ பாகுலம்’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.