'பிரேமலு' உட்பட இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை ஓடிடியில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழி படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்த ’பிரேமலு’ என்ற திரைப்படம் தமிழ் உட்பட சில மொழிகளில் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ’பைரி’ திரைப்படம் நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ’அதோமுகம்’ என்ற தமிழ் படம் டெண்ட்கொட்டா ஓடிடியில், ‘நந்திவர்மன்’ என்ற தமிழ் படமும் டெண்ட்கொட்டா ஓடிடியில் நாளை வெளியாகிறது

மேலும் ’பொன் ஒன்று கண்டேன்’ என்ற திரைப்படம் நாளை ஜியோ சினிமாவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து பிறமொழிப் படங்கள் என்னென்ன வெளியாகின்றன என்பதை பார்ப்போம்

தெலுங்கில் நல்ல வெற்றி பெற்ற ‘காமி’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில், ‘ஓ பீம் புஷ்’ என்ற தெலுங்கு திரைப்படம் ப்ரைம் ஓடிடியில், உடனடி மாங்கல்யம்’ என்ற மலையாள திரைப்படம் சைனா பிளே ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.