'பிச்சைக்காரன் 2' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ’பிச்சைக்காரன் 2’ உள்பட 3 தமிழ் திரைப்படங்களும் மற்ற மொழி திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவர் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான பிச்சைக்காரன் 2’ திரைப்படம் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல் விஜய் ஆண்டனியின் இன்னொரு திரைப்படமான ’தமிழரசன்’ திரைப்படம் ஜி5 ஓடிடியில் வெளியாகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சாந்தனு பாக்யராஜ் நடித்த ’ராவணக்கூட்ட’ம் என்ற திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’Extraction 2’ என்ற ஆங்கில திரைப்படம், ’The Village’ என்ற ஜப்பானிய திரைப்படம் ஆகியவையும், அமேசான் ப்ரைமில் Kandahar என்ற ஆங்கில திரைப்படம், ’Two Souls’ என்ற தெலுங்கு திரைப்படம், ’JeeKarda S1’ என்ற இந்தி திரைப்படம் ’Thaaram Theertha Koodaram’ என்ற மலையாள திரைப்படம் ஆகியவை இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் ஹாட்ஸ்டாரில் ’Shaithan S1’ என்ற இந்தி திரைப்படம், ஜியோ சினிமாவில் ‘I Love You’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆகிய திரைப்படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments