close
Choose your channels

'மெய்யழகன்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Thursday, October 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ’மெய்யழகன்’ உட்பட ஐந்து திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து, ரசிகர்களுக்கு இந்த வாரம் செம குஷியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்த, ’96’ பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’மெய்யழகன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது. அதேபோல், விஜய் ஆண்டனி நடித்த 'ஹிட்லர்’ என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியான நிலையில், இந்த படம் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’கடைசி உலகப் போர்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படம் அமேசான் பிரைம் மற்றும் டெண்டுகோட்டா ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல், ஜி5 சீரிஸ் "ஐந்தாம் வேதம்" என்ற வெப் தொடர் ஜீ தமிழில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் எதுவும் போட்டியிட வெளியாகவில்லை என்ற நிலையில், ’Mooru Kaasina Kudure’ என்ற கன்னட படம் மட்டும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment