'லியோ' உள்பட 5 தமிழ் திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விஜய் நடித்த ’லியோ’ உள்பட ஐந்து தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக இருப்பதை எடுத்து ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

அதேபோல் அமேசான் ப்ரைமில் ’தி வில்லேஜ்’ ஹாட்ஸ்டாரில் சித்தார்த் நடித்த ’சித்தா’, ஆஹா ஓடிடியில் ‘டெமன்’ மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ’சத்திய சோதனை’ ஆகிய தமிழ் படங்கள் வழியாக உள்ளன.

அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோஜு ஜார்ஜ், லிஜிமோல் ஜோஸ் உள்பட பலர் நடித்த ’புலிமாடா’ என்ற மலையாள படம், சோனி லைவ் ஓடிடியில் ’சாவர்’, ‘மேட் இன் காரவன்’ என்ற படம் ஹெச்.ஆர் ஓடிடியில், மற்றும் சைனா பிளே ஓடிடியில் ’குடுக்கு 2025 ’ ஆகிய மலையாள படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

மேலும் ஜியோ சினிமாவில் ’குட் ஓல்டு டேய்ஸ்’ என்ற தெலுங்கு படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.