close
Choose your channels

இந்த வாரம் ஓடிடியில்  'கிடா' உள்பட 3 தமிழ் படங்கள்.. முழு விவரங்கள்..!

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று ’ஃபைட் கிளப்’ உள்பட ஒரு சில படங்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் போட்டியில் ரிலீஸ் ஆகி உள்ளன. கடந்த மாதம் வெளியான ’கிடா’ என்ற திரைப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் பூ ராமு உட்பட பலர் நடித்துள்ளனர். ரா வெங்கட் இயக்கத்தில் உருவான இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அதேபோல் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற படம் நின்று டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

மேலும் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’கூசா முனுசாமி வீரப்பன்’ என்ற படம் ஜி5 ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’ஃபேமிலி’ என்ற மலையாள படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில், ‘சேஷம் மிகெல் பாத்திமா’ என்ற மலையாள படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல் ராம்கோபால் வர்மா இயக்கிய ‘வியூகம்’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், ராக்சச காவியம்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment