சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் ஒரு சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றி உள்ளது
அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணியில் இருந்து ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷேர்ன் வாட்சன் ஓய்வு பெற்றதால் சென்னை அணியில் இருந்து விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து வீரர்களுக்கு பதிலாக சென்னை அணி வேறு புதிய வீரர்களை ஏலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை அணியை அடுத்து பஞ்சாப் அணி மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரால், கெளதம், முயிப் ரஹ்மான், நீஷம், ஹார்டஸ் வில்ஜொன், கருண்நாயர் ஆகியோர்களையும், ஐதராபாத் அணி பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் அலன், சஞ்சய் யாதவ், சந்தீப், பிரித்விராஜ் ஆகியோர்களையும், பெங்களூரு அணி ஆரோன் பின்ச், மொயின் அலி, உடானா, ஷிவம் டூப், உமேஷ் யாதவ், பவன் நேகி மற்றும் குர்கீர்த் மன் ஆகியோர்களையும், கொல்கத்தா அணி டிம் செய்பெர்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோர்களையும் விடுவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com