'காந்தாரா' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ரிலீஸாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடந்த வாரம் கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ உள்பட பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இந்த வாரம் அதாவது நவம்பர் 25ஆம் தேதி என்னென்ன படங்கள் ரிலீசாக உள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.

காந்தாரா: கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் இந்த வாரம் அமேசானில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

பிரின்ஸ்: அதேபோல் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படமும் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நிவின்பாலி, அதிதிபாலன் நடித்த ‘படவெட்டு’ மற்றும் ’காக்கி’ ஆகிய திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளன. மேலும் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான், சன்னி தியோல், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘சப்’ என்ற இந்தி படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.