பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் உள்பட 5 நடிகர்கள் இணைந்த மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை கமல்ஹாசன் உள்பட 5 பிரபல நடிகர்கள் பொன்னியின் செல்வன் கதை குறித்து முன்னுரை கூறியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்கில் ராணா டகுபதி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைகினி ஆகிய ஐவரும் ஐந்து மொழிகளில் பொன்னின் செல்வன் முன்னுரை குறித்த உரையை பேசி உள்ளனர் என மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
As magnificent as it could get!
— Lyca Productions (@LycaProductions) September 5, 2022
Witness the trailer of #PS1 in 5 languages in the captivating voices of @ikamalhaasan Sir, @AnilKapoor Sir, @RanaDaggubati Sir, @PrithviOfficial Sir and #JayantKaikini Sir!#PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions pic.twitter.com/KhBWbl2JP5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments