உதயநிதியின் 'கலகத்தலைவன்' படத்துடன் மோதும் 6 படங்கள்: வின்னர் யார்?

  • IndiaGlitz, [Sunday,November 13 2022]

உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகத்தலைவன்’ என்ற திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்துடன் மொத்தம் ஏழு படங்கள் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

‘கலகத்தலைவன்’ : உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படம் நிச்சயம் வரும் வாரத்தில் ரிலீஸ் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நான் மிருகமாய் மாற: சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியா நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் சசிகுமார் படம் என்பதால் ஓரளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

யூகி: கதிர், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி உள்பட பலர் நடித்த இந்த படம் ஒரு திரில்லர் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

காரோட்டும் காதலி: முற்றிலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடகி அனன்யா பட் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை சிவா என்பவர் இயக்கியுள்ளார்

நோக்க நோக்க: அறிமுக நடிகர் அர்ஜுன் சுந்தரம் மற்றும் சிந்தியா நடிப்பில் உருவாகியுள்ள ’நோக்க நோக்க’ திரைப்படத்தை முத்துக்குமார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் நவம்பர் 18ல், ‘கெத்துல’ மற்றும் ‘2323’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.