'ஜெயிலர்' உள்பட எத்தனை தமிழ் திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் ரிலீசான சூப்பர் ஹிட் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதேபோல் பரத், வாணி போஜன் நடித்த ’லவ்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் காதம்பரி ஆதர்ஷ் மதிகாந்தம் உள்பட பலர் நடிப்பில் உருவான ’நாயாடி’ என்ற திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ஜீ5 தளத்தில் ‘ஹட்டி’ நேரடி டிஜிட்டல் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் அனுராக் காஷ்யப், நவாசுதீன் சித்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நேரடி டிஜிட்டல் திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

மேலும் ‘ஷவம்’ என்ற மலையாள படம் ஐஸ்ட்ரீம் ஓடிடியிலும், ‘விவாஹ அவஹனம்’ என்ற மலையாள திரைப்படம் மற்றும் ‘உரு’ என்ற மலையாள திரைப்படம் ஹெச்.ஆர் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

More News

கவின் - இளன் படத்தின் நாயகிகள் இந்த இரு நடிகைகளா?

நடிகர் கவின் நடிப்பில், இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்டார்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்

ஆட்டம் ஆரம்பம்.. 'கமல் 233' படத்தின் மாஸ் வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக  சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்

ஸ்டார் படங்களின் அலையில் அடித்துப் போகும்  சிறு படங்கள்..  நாளை வெளியாகும் படம் குறித்து சுரேஷ் காமாட்சி ஆதங்கம்..!

 ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறுபடங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என்று நாளை வெளியாக இருக்கும் சேரனின் 'தமிழ்க்குடிமகன்' படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் இன்று காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கிய நிலையில், பார்வையாளர்களால் பெரிய கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிர் மற்றும் உலகம் உடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நயன்தாரா.. க்யூட் புகைப்படம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்  கணக்கு தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவாக தனது மகன்கள் உயிர் மற்றும் உலகு ஆகியோருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்