close
Choose your channels

இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பது அடுத்து ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா நடித்த ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் ஆர்யா ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் இந்த வாரம் ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’ஃபர்ஹானா’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது. மேலும் சித்தார்த் நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ’டக்கர்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ’ஸ்வீட் காரம் காபி’ என்ற வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’65 Movie’ மற்றும் ’The Outlaws’ ஆகிய ஆங்கில படமும், ’Gold Brick’ என்ற பிரெஞ்ச் படமும் வெளியாகிறது. ஜீ5 ஓடிடியில் ’Tarla’ என்ற இந்தி படமும், ஜியோ சினிமாவில் ‘The Magic Of Shiri’ என்ற இந்தி படமும் வெளியாகிறது. ‘IB71’ என்ற இந்தி படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மேலும் ’Janaki Jane’ என்ற மலையாள திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், ’Ntikkakkakkoru Premondarnn’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில், ’Unaad’ என்ற மராத்தி படம் ஜியோ சினிமாவில் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment