பகத் ஃபாசிலின் 'ஆவேஷம்' உள்பட இன்று எத்தனை படங்கள்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும் திரையரங்குகளில் வெற்றி பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

முதலாவது பகத் பாஸில் நடித்த ‘ஆவேஷம்’ என்ற மலையாள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கு அதிகமாக திரையரங்குகளில் வசூல் ஆன நிலையில் அமேசான் பிரைமில் இந்த படம் இன்று முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதே அமேசான் பிரைமில் விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ என்ற திரைப்படம் வெளியாகிறது என்பதும் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் டெண்ட்கொட்டா ஓடிடியில் ’கள்வன்’ என்ற திரைப்படம் வெளியாகிறது என்பதும் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா, பாரதிராஜா உள்பட பலர் நடித்த இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அதே போல் ’7 ஜென்மங்கள் என்ற தமிழ் படமும் பிசிநீட் என்ற ஓடிடியில் வெளியாகிறது. அது மட்டும் இன்றி ’கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆகா ஓடிடியிலும் ஒரு சில ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களும் இன்று ஓடிடியில் வெளியாகிறது என்று குறிப்பிடத்தக்கது

More News

ஆரா என்றால் என்ன? ஆரா சக்தியின் ரகசியங்களை சொல்கிறார் பிரபல ஆரா ஜோதிடர் வினோத் குமார்!

பிரபல "ஆரா" ஜோதிடர் "ஆரா வினோத் குமார்" ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆரா" சக்தியின் மர்மங்களை ஆழமாக ஆராய்கிறார்.

கண்கவருமஸ்மோக்கிங் பிஸ்கட் உயிரையே பறிக்கிறதா ?எச்சரிக்கும் மருத்துவர்கள் !

யூடுயுப் இன்ஸ்டா பக்கத்தில் நம்மில் பலர் இதை பார்த்து உள்ளோம்.பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக உள்ள ஸ்மோக்கிங் பிஸ்கட் தற்போது ஒரு மனிதனின் உயிரையே பலி வாங்குகிறது என்றால் நம்புவீர்களா ?...

'உத்தம வில்லன்' பட நஷ்டம் விவகாரம்.. நாளை பேச்சுவார்த்தை.. கமல்ஹாசன் வருவாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இந்த படத்தால் இயக்குனர் லிங்குசாமி மிகப்பெரிய நஷ்டம் அடைந்த நிலையில் அந்த நஷ்டத்தை

போருக்கு போகனும் போகனும் பொருள எடுத்து வாய்யா.. தனுஷின் 'ராயன்' சிங்கிள் பாடல்..!

தனுஷின் ஐம்பதாவது படமான 'ராயன்' என்ற படத்தை அவரே இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும்

நடிகை சமந்தாவின் நிர்வான புகைப்படத்திற்கு அவருக்கு உள்ள நோய் தான் காரணமா ?

சமந்தாவுக்கு உள்ள நோயின் அதிகபட்ச பாதிப்பே அவர்களின் உடலில் உள்ள செல்கள் அவருக்குள்ளே சில தாக்குதலையும் பாதிப்பையும் உண்டாக்கும்...