இன்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி: சென்னையில் கொரோனாவின் கோரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஒருவர் டாக்டர் என்றும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒருவர் டாக்டர் என்று கூறப்படுகிறது. சென்னை கீழ்பாக்கத்தில் சேர்ந்த 70 வயது டாக்டர் ஒருவர் மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்ததாகவும் அவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே ஒருசில டாக்டர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு டாக்டர் பலியாகியுள்ளது டாக்டர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னையில் நேற்று கொரோனாவால் 19 பேர் பலியான நிலையில் இன்று இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout