'கஸ்டடி' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி’ உட்பட இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் உள்பட என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த 'கஸ்டடி’ என்ற திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல் ’அடைமழை காலம்’ மற்றும் ’மாலை நேர மல்லி பூ ’ஆகிய தமிழ் படங்களும் நெட்பிளிக்ஸ் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள திரையுலகில் வசூல் புரட்சி செய்த ’2018’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹாட்ஸ்டாரில் Avatar 2, ஆஹா ஓடிடியில் ‘மென் டு’ என்ற தெலுங்கு படம், ஜியோ சினிமாவில் ‘பிளடி டாடி’ என்ற இந்தி படம் ஆகியவையும் இந்த வார ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. மேலும் ஜீ5 ஓடிடியில் ’Gunehgaar’ என்ற இந்தி படமும் இந்த வார ஓடிடி பட்டியலில் உள்ளது.

More News

தமிழக அரசியல்வாதியின் மகனை மணக்கிறாரா மேகா ஆகாஷ்? தீயாய் பரவும் தகவல்..!

பிரபல தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இணையதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

பாஸ்மதி அரிசி மீது ஏன் இவ்வளவு காதல்? உடல் ஆரோக்கியத்தில் இதன் பங்கு என்ன?

இந்தியாவில் பெரும்பாலான நபர்களின் விருப்ப உணவாக தற்போது பிரியாணி மாறிவிட்டது. ஒருவேளை சைவ உணவுக்காரர்களாக இருந்தாலும் புலாவ் வகையான பிரியாணி உணவுகளைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்

கண்டிப்பா உன் கதைய முடிச்சிடுவா.. தோனியின் 'எல்.ஜி.எம்' 'லவ்டுடே' பாணி படமா?

 தல தோனி தயாரிக்கும் முதல் திரைப்படமான 'எல்.ஜி.எம்' என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் டீசர் வெளியாகி இணையதளங்களில்

ராம் பொத்தினேனி அடுத்த படம்.. மைசூரில் படப்பிடிப்பு..

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா  சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர்

திருமணம் செய்யாமல் 2 ஆவது குழந்தையை வரவேற்கும் பாலிவுட் நடிகர்… ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் அர்ஜுன் ராம்பால் தனது காதலி மூலம் 2 ஆவது குழந்தையை வரவேற்க இருக்கிறார்.