புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,June 16 2020]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மட்டும் சற்று குறைந்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிற நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் தினசரி பாதிப்பு என்பது மிக அதிகமாகும்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து பிற மாநிலத்திற்கும், பிற மாவட்டங்களுக்கும் செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் சென்னைவாசிகள் எந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு புதுவையில் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உள்ளிட்ட பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப் படுவார்கள் என்றும் மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுவை உள்ளே வர யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். புதுவை முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.