சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் விட்டுவிட்டும், இன்று காலையிலும் கனமழை பெரும்பாலான இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் வானிலை அறிக்கையின்படி இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு செய்துள்ளனர். இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

அவள், விழித்திரு படங்களின் ஓப்பனிங் வசூல் எப்படி?

கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தின் 'அவள்' மற்றும் தன்ஷிகாவின் 'விழித்திரு' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

கனமழையிலும் கலெக்சனில் களைகட்டிய தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் வசூலை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை: ரசிகர்களிடையே கமல் ஆவேச பேச்சு

தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன்.

உலகில் முதல்முறையாக விஷால் எடுத்திருக்கும் ''V Shall' என்ற புதிய முயற்சி

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிந்த நடிகர், நடிகையர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது தெரிந்ததே.

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது