சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஐந்தாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் இன்று திட்டமிட்டபடி அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த சட்டப்பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இந்து தீவிரவாதம் குறித்த சர்ச்சை: கமல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு?

உலகநாயகன் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார் என்பது தெரிந்ததே.

மழை வெள்ளம் மீட்புப்பணி: களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி, நாசர் குழு

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடு போல் காட்சி அளிக்கின்றது.

உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப்? தீவிரவாதிகளின் கைவரிசையா?

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது ஃபேஸ்புக் உரிமையாளரின் கையில் உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென உலகின் பல நாடுகளில் வாட்ஸ்

மெர்சல்' படக்குழுவுக்கு விஜய் கொடுத்த 'சக்சஸ்' பார்ட்டி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதால்

சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சுசீலா

பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா குறித்த சர்ச்சைக்குரிய வதந்தி ஒன்று சில நிமிடங்களாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.