இந்த வார ஓடிடியில் 3 தமிழ்ப்படங்கள்.. அருள்நிதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 21 2023]

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் தமிழ் படங்கள் உட்பட மற்ற மொழி படங்கள் ஏராளமாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அருள்நிதி நடித்த படம் உள்பட 3 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன.

ஏற்கனவே இந்த வாரம் திரையரங்குகளில் 8 தமிழ் படங்கள் வெளியாக நிலையில் ஓடிடியில் மூன்று தமிழ் படங்கள் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.



1. கழுவேத்தி மூர்க்கன்: அருள்நிதி நடிப்பில் கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.



2. குலசாமி: முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது. விமல், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் உட்பட இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர்.



3. கருங்காப்பியம் : காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்த ’கருங்காப்பியம்’ திரைப்படம் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது. பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கி உள்ளார்.

மேலும் ஜியோ சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷிக் என்ற இந்தி சீரியல், நெட்பிளிக்ஸில் ‘த்ரிஷாங்கு’ என்ற மலையாள திரைப்படமும், ’இண்டினிட்டி ராமாயணம்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் அமேசான் ப்ரைமில் ‘மல்லிபெல்லி’ என்ற தெலுங்கு படமும், ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘கேரளா கிரைம் பைல்ஸ் என்ற மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ‘பாப்கார்ன்’ என்ற தெலுங்கு படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரா இப்படி? டாப் ஆங்கிள் கவர்ச்சி புகைப்படம் வைரல்!

மலையாள சினிமாவில் வெளியான 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சி நடித்து ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.

ஜீ கர்தா-வில் எதற்கு இவ்வளவு ஆபாசம்? விமர்சனத்துக்கு இடையே நடிகை தமன்னா விளக்கம்!

சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்கள் ஆன பிறகும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா சமீபகாலமாக ஆபாசமான காட்சிகள் மற்றும் அந்தரங்க காட்சிகளில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் லோகேஷ் கனகராஜ்.. மடோன் அஸ்வின் சொன்ன ஆச்சரிய தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல ஐடியாக்களை கொடுத்துள்ளதாக சமீபத்தில் அளித்த

தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்.. ஆனந்த் எல்.ராய் படத்தின் மாஸ் தகவல்..!

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்கள் 'ராஜண்ணா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் மீண்டும் ஒரு

'கங்குவா' படப்பிடிப்பு முடிய இன்னும் இத்தனை மாதங்கள் ஆகுமா? அப்ப ரிலீஸ் எப்போது?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதம் தான்