'அமரன்' உட்பட இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த விவரங்கள்..!
- IndiaGlitz, [Thursday,December 05 2024]
சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ உள்பட இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன? தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்கள் என்னென்ன ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன என்பதை விவரங்கள் தற்போது பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படம் இந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருப்பதால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளை போலவே ஓடிடியிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் இன்னொரு திரைப்படம் ’சார்’. விமல் நடித்த இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த வாரம் ஒளிபரப்பாகிறது.
இந்த வாரம் இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகும் நிலையில், ’மாட்கா’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது. ’மர்பி’ என்ற கன்னட திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது.