'ஆடுஜீவிதம்' உட்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த வாரம் பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடித்த ’ஆடு ஜீவிதம்’ உட்பட சில படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் விதார்த், வாணி போஜன், ரகுமான் நடித்த ‘அஞ்சாமை’ திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் நாசர், தலைவாசல் விஜய் நடித்த ‘அக்காலி’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ‘வடக்கன்’ என்று முதலில் டைட்டில் வைக்கப்பட்டு அதன்பின் ‘ரயில்’ என்ற டைட்டிலில் வெளியான திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் ‘பஹிஸ்கரணா’ என்ற தெலுங்கு வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில், ‘மியூசிக் ஷாப் மூர்த்தி’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.