தமிழிசையால் புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலையில் விபத்து நேர்ந்த ஒருவருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுச்சேரியிலிருந்து, சென்னைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார். படாலம் கூட்ரோடு அருகில் செல்கையில் இளைஞர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் போராடுவதை கண்ட, தமிழிசை காரிலிருந்து இறங்கி சென்று விசாரித்தார். அந்த இளைஞருக்கு தலை, முகத்தில் காயம் பட்டு, ரத்தம் வழிந்து கிடப்பதை கண்ட தமிழிசை, அங்கு சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். பின் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில், சிகிச்சைக்காக அந்த இளைஞரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் காவலரை அனுப்பியதுடன், அந்த மருத்துவமனை மருத்துவரை தொடர்பு கொண்டு, இளைஞர் பற்றி நலம் விசாரித்தார். அவர் உடல்நலத்துடன் இருப்பதை அறிந்த பிறகே அந்த இடத்திலிருந்து கிளம்பியுள்ளார் தமிழிசை.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
"புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் காணப்பட்டார். அவருக்கு உடனே முதலுதவி அளித்து என்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் காவலர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரை தொடர்பு கொண்டு,உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.விபத்துக்குள்ளான இளைஞருக்கு இரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு டுவிட்டரில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments