தமிழிசையால் புதுச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்...!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

சாலையில் விபத்து நேர்ந்த ஒருவருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புதுச்சேரியிலிருந்து, சென்னைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார். படாலம் கூட்ரோடு அருகில் செல்கையில் இளைஞர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் போராடுவதை கண்ட, தமிழிசை காரிலிருந்து இறங்கி சென்று விசாரித்தார். அந்த இளைஞருக்கு தலை, முகத்தில் காயம் பட்டு, ரத்தம் வழிந்து கிடப்பதை கண்ட தமிழிசை, அங்கு சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். பின் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில், சிகிச்சைக்காக அந்த இளைஞரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் காவலரை அனுப்பியதுடன், அந்த மருத்துவமனை மருத்துவரை தொடர்பு கொண்டு, இளைஞர் பற்றி நலம் விசாரித்தார். அவர் உடல்நலத்துடன் இருப்பதை அறிந்த பிறகே அந்த இடத்திலிருந்து கிளம்பியுள்ளார் தமிழிசை.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் காணப்பட்டார். அவருக்கு உடனே முதலுதவி அளித்து என்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் காவலர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரை தொடர்பு கொண்டு,உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.விபத்துக்குள்ளான இளைஞருக்கு இரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு டுவிட்டரில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

கருத்துக் கணிப்பு என்பவை பொய்ப் பிரச்சாரங்களே… தொண்டகளுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருத்துக் கணிப்பு பெயரில் நடைபெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர்

நான் ரொம்ப டயர்டு ஆகிவிட்டேன், என்னால முடியலை: ராதாரவி குறித்து சின்மயி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

தான் பட்ட அவமானத்தை முதல்முறையாக கண்ணீருடன் சொன்ன ஷிவாங்கி! 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே ஷிவாங்கி ரசிகர்களுக்கு அறிமுகம் என்றாலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்

எனக்கு கிடைத்த விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்‌: ரஜினிகாந்த் நன்றி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று காலை திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரதமர் மோடி,

சூனியம் வச்சிருக்கேன்....எனக்கு ஓட்டு போடலைனா, கை, கால் வராது....! பயமுறுத்தும் திமுக வேட்பாளர்....!

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, நாத்திகம்  போன்றவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் திமுக-வில், வேட்பாளர் ஒருவர் மக்களை அச்சுறுத்தும் தோணியில் வாக்கு கேட்டுள்ளார்.