மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை, நினைவிடம், நினைவு இல்லம் திறப்பு… தொண்டர்கள் ஆரவாரம்!

தமிழக முதலமைச்சராகவும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது. ஃபினிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு இருந்த அந்த நினைவிடம் ரூ.80 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பல லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் நினைவிடத்தை அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வையொட்டி அதிமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் கூறிவந்த நிலையில் முதல்வர் அதை நினைவிடமாக மாற்றி திறந்து வைத்துஇருக்கிறார்.

இந்த நினைவு இல்லம் கிட்டத்தட்ட 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் கூடியதாக இருக்கிறது. அதில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இருப்பதோடு 8,376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப் பொருட்களும் 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையலான நங்க நகைகளும் 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும் வெள்ளி பாத்திரங்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமா அரசியல் என ஆளுமை கொண்ட அவரின் கருப்பு வெள்ளை அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அதோடு அவர் பயன்படுத்திய பூஜை அறையும் இருக்கிறது. இந்தப் பொருட்களை எல்லாம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யபடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இந்நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள் எம்.எல்எக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

More News

ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய தல அஜித்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவாக நேற்று மெரினாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அமேசானில் சென்சார் கட் இல்லாத 'மாஸ்டர்? 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து

மனைவி பிரிந்து சென்றதால்… 18 பெண்களை கொலை செய்த கொடூரச் சம்பவம்!

ஹைத்ராபாத்தில் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றால் துக்கம் தீராக ஒரு நபர் தொடர்ந்து 18 பெண்களை கொடூரமாக கொலை செய்து இருப்பது கடும்

அஜித், விஜய் பட இயக்குனரின் மகனை ஹீரோவாக்கும் கே.எஸ்.ரவிகுமார்!

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கிய பல திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தான் தயாரிக்க இருக்கும் 'கூகுள் குட்டப்பன்'

ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.