மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை, நினைவிடம், நினைவு இல்லம் திறப்பு… தொண்டர்கள் ஆரவாரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதலமைச்சராகவும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது. ஃபினிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு இருந்த அந்த நினைவிடம் ரூ.80 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பல லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் நினைவிடத்தை அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வையொட்டி அதிமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் கூறிவந்த நிலையில் முதல்வர் அதை நினைவிடமாக மாற்றி திறந்து வைத்துஇருக்கிறார்.
இந்த நினைவு இல்லம் கிட்டத்தட்ட 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் கூடியதாக இருக்கிறது. அதில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இருப்பதோடு 8,376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப் பொருட்களும் 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையலான நங்க நகைகளும் 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும் வெள்ளி பாத்திரங்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமா அரசியல் என ஆளுமை கொண்ட அவரின் கருப்பு வெள்ளை அரிய புகைப்படங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அதோடு அவர் பயன்படுத்திய பூஜை அறையும் இருக்கிறது. இந்தப் பொருட்களை எல்லாம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யபடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள் எம்.எல்எக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout