'இணையதளம்' மூலம் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை சுகன்யா
- IndiaGlitz, [Tuesday,July 26 2016]
பாரதிராஜாவின் 'புதுநெல்லு புதுநாத்து' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சுகன்யா அதன் பின்னர் கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், சரத்குமார், உள்பட பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 'இணையதளம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகிறார். 'தனி ஒருவன்' உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்வேதாமேனன், தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
'பிசாசு', 'பசங்க 2' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை சங்கர் மற்றும் சுரேஷ் இயக்குகின்றனர். அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.