'இணைந்த கைகள்' ரீமேக்கில் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சமீபத்தில் புதிய செயலாளராக பதவியேற்ற விஷாலும், பொருளாளராக பதவியேற்ற கார்த்திக்கும் இணைந்து ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியது.
கடந்த 1990ஆம் ஆண்டு ராம்கி மற்றும் அருண்பாண்டியன் இணைந்து நடித்த 'இணைந்த கைகள்' படத்தின் ரீமேக்கில் விஷால் மற்றும் கார்த்தி நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நடிகர் சங்க கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை இன்று விஷால் மறுத்துள்ளார். நடிகர் சங்க கட்டிடத்திற்காக விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அந்த படத்தில் முக்கிய நடிகர்கள் பலரும் இணைந்து நடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 'இணைந்த கைகள்' ரீமேக்கில் நானும் கார்த்தியும் நடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments