உலக வரலாற்றில் (மே 6) இன்று...
- IndiaGlitz, [Wednesday,May 06 2020]
MIR ஸ்கேனிங் கருவியைக் கண்டுபிடித்த பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் பிறந்த தினம் இன்று. கதிர்வீச்சை பயன்படுத்தாமல் மனித உள் உறுப்புகளை தெளிவாக காட்டக்கூடிய கருவியான MIR ஸ்கேன் மருத்துவ உலகில் ஒரு மைல்கல் என்றே கருதப்படுகிறது.
ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு 6 மே, 1861 ஆம் ஆண்டு பிறந்தார். அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான இவர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1919 – 1920 வரையிலும் 1928 -1929 வரையிலும் பதவி வகித்துள்ளார்.
உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் பிறந்த தினம். உளவியல் சிகிச்சையில் பின்பற்றப்படும் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை முதன்முதலின் கூறியவர் இவரே. உள்மனம் (Unconscious Mind) கோட்பாடு, உளச்சிக்கலில் மாட்டிக் கொண்டவர்களுடன் உரையாடல் மூலம் அவரது உள்ளுணர்வை வெளிக்கொணர முடியும், பாலுணர்வு விருப்பம் மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தியாக இருக்கிறது, உள்மன ஆசைகளின் வெளிப்பாடுகளே கனவுகள் போன்ற முக்கியக் கோட்பாடுகளை எடுத்துக் கூறிய பிராய்ட் இந்த தினத்தில்தான் பிறந்தார். பின்னால் வந்த யூங், லக்கான் போன்ற உளவிலாளர்கள் பிராய்டின் பல கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டே தங்களது தத்துவங்களை வளர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதன் முதலில் மே 6, 1854 இல் விக்டோரியா மகாராணியாரின் தபால் தலை வெளியிடப்பட்டது. மகாத்மா காந்தியோடு உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட மிர்துலா சாராபாய் பிறந்த தினமும் இன்று.