முதிர்ந்த வயதில் IVF மூலம் குழந்தை பெற்று கொள்வது ஆபத்தானதா ?
Send us your feedback to audioarticles@vaarta.com
முதலில் IVF முறை என்றால் என்ன?அதில் இருக்க கூடிய செயல்முறைகள்,பிரச்சினைகள்,தீர்வு,எந்த வயதினர் போன்ற அனைத்தையும் இந்த பதிவில் காண்போம்.
IVF என்பது இன் விட்ரோ பெர்ட்டிலைசேஷன் என்பதன் சுருக்கம் ஆகும்.
திருமணம் ஆகி அதிக ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்கள் இந்த முறையை மேற்கொள்வார்கள்.இயற்கையான முறையில் கருத்தரிக்க விரும்புபவர்களுக்கு மருத்துவர்கள் IUI என்ற முறையை பரிந்துரைப்பார்கள்.ஒரு ஆணின் விந்தணு தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அல்லது கணவன் மனைவி இடையே சரியான உடல் உறவு இல்லாத காரணத்தினாலோ இந்த முறை உதவும்.
IVF சிகிச்சை:
இந்த முறையில் பெண்ணிடம் இருந்து அதிக முட்டை சேகரிக்கப்படுகிறது.அதிகமான முட்டையை உருவாக்க அந்த பெண்ணிற்கு ஹார்மோன் ஊசி போடப்படுகிறது.முட்டையின் அளவு அதிகரிக்கும்போது கருப்பையில் இருந்து யோனி வழியாக முட்டை சேகரிக்கப்படுகிறது.பின் கணவரிடமிருந்து விந்து பெறப்பட்டு இரண்டும் ஆய்வகத்தில் வைத்து கருவுற்ற படுகிறது.பிறகு கருவுற்ற மூன்று அல்லது நான்கு முட்டைகள் பெண்ணின் யோனி வழியாக கருப்பையில் செலுத்தப்படும்.இதன் முடிவுகள் தெரிய கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஆகும்.
இந்த முறை அந்த பெண்ணிற்கு வெற்றி பெறவில்லை என்றால் அந்த பெண்ணின் உடல்நிலை மற்ற காரணங்கள் அடிப்படையில் இந்த முறை மீண்டும் மேற்கொள்ளப்படும்.
IVF முறையின் செயல்முறை மற்றும் வலி:
இந்த முறையில் கருவுறுதல் மருந்துகள் எடுத்து கொள்ளப்படுவதால் மனநிலை மாற்றங்கள்,வயிற்று வலி,தலை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.பெரிதாக வலிகள் இருக்காது.IVF முறை சிறியதாக மற்றும் அதிக வலியை ஏற்படுத்தாது.கருப்பை வீக்கம் ஏற்படும் மேலும் அதிகமாக வியர்க்கும்.இந்த முறை பலருக்கு ஆரம்ப சிகிச்சையிலேயே வெற்றியை கொடுக்கும்.சிலர் தோல்வியை அடைவார்கள்.இருப்பினும்,முறையான சிகிச்சை மற்றும் வழிகாட்டுதலோடு மீண்டும் ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க முடியும்.எனவே கவலை கொள்ள தேவை இல்லை.
தோல்விக்கான காரணிகள்:
IVF முறை தோல்வி அடைந்த பின் சோர்வு அடையாமல் அதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய வேண்டும்.நீங்கள் மேற்கொண்ட சிகிச்சையில் உள்ள தவறு,சரியான நடவடிக்கைகள் எடுப்பது,சரியான மனநிலையை உருவாக்குவது என்பதை யோசிக்க வேண்டும்.வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றே இல்லை என்பதை உணர்ந்து தோல்வி கண்ட அனைவரும் மீண்டும் IVF முறையை மேற்கொள்ளலாம்.
மருத்துவ ஆலோசனை:
IVF முறை பொதுவாகவே கொடுத்த வெற்றி விகிதம் அதிகம்.இந்த சிகிச்சையில் விந்தணு,கருமுட்டை,கருப்பை மூன்றின் ஆரோக்கியம் மிக அவசியம்.அதை பொறுத்தே கரு உருவாகிறது.ஒரு பெண்ணிற்கு இயல்பை காட்டிலும் அதிகமான உடல் எடை,கர்பப்பை கோளாறு,தைராய்டு,குறைந்த விந்தணு போன்றவற்றால் கூட கர்ப்பம் தரிக்காது.எனவே மருத்துவரின் முறையான ஆலோசனைபடி இந்த முறையை மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
முதிர்ந்த வயது பெண் IVF சிகிச்சை:
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சியை கொண்ட இந்தியாவில்,IVF முறையின் வெற்றி விகிதம் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 70-80 % வெற்றி விகிதங்களையும்,40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 40-50% வெற்றி விகிதங்களையும் தருகிறன்றன.மேலும் இதை விட அதிக வயதை உடைய பெண்களுக்கு அதிகமான தோல்வியையே கொடுத்துள்ளன.சிகிச்சை பாதுகாப்பானதாகவும் அதிக எண்ணிக்கையுடைய கருக்களை கொண்டு இருக்க வேண்டும்.
IVF ஷாட்ஸ்:
IVF ஷாட்ஸ் என்பது அதன் சிகிச்சையின்போது வழங்கப்படும் ஹார்மோன்களாகும்.இது தோலின் அடியில் போடப்படும் ஊசிகள் வயிற்று பகுதியிலோ தொடைப் பகுதியிலோ செலுத்தப்படும்.அண்டவிடுப்பை தடுக்க,கருமுட்டை முதிர்வடைதலை தூண்ட,பெண்ணின் கருமுட்டைகளை தூண்ட இம்முறை உதவுகின்றன.இது போன்ற தகவல்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments