தமிழகத்தில் ரூ. 2,368 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்கள்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மேலும் பல புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். அதன்படி ஜுலை 27 ஆம் தேதி தமிழகத்தில் மேலும் 8 புதிய தொழில் நிறுவனங்கள் ரூ. 2,368 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். இந்நிறுவனங்களின் முதலீட்டால் 24,870 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பபிடத் தக்கது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் ரூ. 1,500 கோடி முதலீட்டில் 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் “கேப்பிலாண்ட்” நிறுவனத்தின் சார்பில் இண்டர்நேஷனல் டெக்பார்க் அமைக்கப் படவுள்ளது. கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.350 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான டாடா கெமிக்கல் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மஹேந்திரா ஆரிஜிக்கல் தொழிற் பூங்காவில் ரூ. 105 கோடி மதிப்பீட்டில் 160 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலான நிஸெய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் திட்டம், ஜப்பான் நாட்டின் உசுய் சுசிரா நிறுவனத்தின் ரூ. 100 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் போன்றவை செயல்படுத்தப் படவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் “மகேந்திரா வொர்ல்ட் சிட்டி” தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி மதிப்பிலான 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் “டைநெக்ஸ் நிறுவனத் திட்டம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான ஸ்டீல் ஷாப்பி நிறுவனத்தின் புதிய திட்டம். கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் அமையவுள்ள எம்.ஆர்.சி. மில்ஸ் நிறுவனத்தின் திட்டம். விழுப்புரம் மாவட்டம் கம்பூரில் ரூ. 16 கோடி மதிப்பிலான 160 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ராஜராஜேஸ்வரி லைப் கேர் மருந்து நிறுவனத்தின் புதிய திட்டம் என தமிழகத்தில் 8 புதிய திட்டங்களின் மூலம் ரூ.2,368 கோடி முதலீட்டில் 24 ஆயிரத்து 870 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com