தமிழகத்தில், பொதுஇடங்களில் மாக்ஸ் அணியாவிட்டால்… எச்சில் துப்பினால் அபராதம்… எவ்வளவு தெரியுமா???
- IndiaGlitz, [Saturday,September 05 2020]
தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் பொதுஇடங்களில் நடமாடினாலோ அல்லது பொதுஇடங்களில் எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என தமிழக அதிரடி அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அஜாக்கிரதையாக வெளியிடங்களுக்குச் செல்லுவது அதிகமாகி விட்டது. இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக அரசின் புதிய விதிமுறைகளுக்காக பொதுசுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி விதிகளை பின்பற்றாமல் இருந்தால மேலும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி,
பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம்
பொதுஇடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்
தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான விதிகளை மீறினால் ரூ.500 அபராதம்
பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
கொரோனா விதிமுறைகளை மீறும் ஜிம், சலூன், ஸ்பா நிலையங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.