பொள்ளாச்சி சம்பவம்: 19 வயது கல்லூரி மாணவியின் ஸ்டேட்மெண்ட்

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முதலில் போலீசில் புகார் அளித்த 19 வயது கல்லூரி மாணவி அளித்த ஸ்டேட்மெண்ட் இதுதான்:

பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறேன். எனது பள்ளித் தோழி அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசுவையும், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் (எ) ரிஷ்வந்தையும் எனக்கு தெரியும்.

அவர்கள் இருவரும் என்னுடன் போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் இருவரிடமும் நானும் நட்பு ரீதியில் பழகினேன். இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நான் கல்லூரியில் இருந்த போது சபரிராஜன் எனக்கு போன் செய்து உன்னிடம் தனியாக பேச வேண்டும். உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிலையத்துக்கு வா என்றார்.

நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பஸ் ஏறி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் காரை நிறுத்திக் கொண்டு சபரியும் திருநாவுக்கரசும் இருந்தனர். அப்போது வா காரில் போய் கொண்டே பேசலாம் என கூறினர். இதையடுத்து நான் காரில் பின் சீட்டில் ஏறினேன். என்னுடன் சபரிராஜன் உட்கார்ந்தார்.

காரை திருநாவுக்கரசு ஆன் செய்ததும் காரில் மேலும் இருவர் ஏறிக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் யார் என சபரியிடம் கேட்டபோது கடை வீதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சதீஷ் எனவும், பின் சீட்டில் இருந்தவர் பக்கோதிபாளையம் வசந்தகுமார் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் ஏதோ பேச வேண்டும் என்றாயே என்ன பேச வேண்டும் என கேட்டேன். உடனே திருநாவுக்கரசு தாராபுரம் சாலையில் சிறிது தூரம் சென்றுவிட்டு காரை நிறுத்தினார். அப்போது எனது விருப்பம் இல்லாமல் சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினார். நான் தடுப்பதற்குள் முன் சீட்டில் இருந்த சதீஷ் வீடியோ எடுத்தான்.

இதனையடுத்து நான் மேலாடை இல்லாத கோலத்தில் வீடியோ எடுத்து என்னை மிரட்டினர். என்னிடம் பணம் கேட்டனர். பணம் இல்லை என்றதற்கு கழுத்தில் இருந்து தங்க செயினை கேட்டனர். நான் மறுத்ததால் மற்ற மூவரும் என் கைகளை பிடித்துக் கொள்ள சதீஷ் எனது கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டான்.

பின்னர் என்னை காரில் இருந்து இறக்கி விட்டனர். நான் அழுவதை பார்த்த இருவர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டனர். கல்லூரிக்கு வந்து அங்கிருந்து வீட்டுக்கு வந்த நான் இதை பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் இந்த 4 பேரும் என்னை போன் செய்து பணம் கேட்டு மிரட்டினர். அதனால் 24-ஆம் தேதி எனது குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டேன். இதன் பிறகுதான் புகார் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அந்த பெண்ணின் ஸ்டேட்மெண்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

18 வருடங்களுக்கு பின் தமிழுக்கு விருது பெற்று கொடுத்த '96' திரைப்படம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களும் பங்கு பெறுவதுண்டு.

தினகரனின் அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

டிடிவி தினகரன் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கி விட்டு மீதியுள்ள புதுவை உள்பட 39 மக்களவை தொகுதிகளிலும்,

உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் பிரபலம்

ஒவ்வொரு தேர்தல் சீசனிலும் கோலிவுட் திரையுலகில் உள்ளவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தோ அல்லது ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்தோ அரசியலில் குதிப்பது வாடிக்கையாகி உள்ளது.

விஷ்ணுவிஷாலுடன் இணையும் பிரபல ஹீரோ!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

காமஹாசனும் கதாகாலட்சேபமும்: கமல்ஹாசனை விமர்சித்த அதிமுக நாளிதழ் 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து நேற்று கமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் ஆதரவு குவிந்தது.